Freelancer / 2024 நவம்பர் 25 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐந்து வருடங்களின் பின்னர் பல மாற்றங்களுடன் பலமான தொழிற்சங்கமாக மீண்டெழுந்து வெற்றிக்கொள்வோம் என இ.தொ.கா பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா, நானுஓயா மற்றும் புஸ்ஸலாவ ஆகிய காரியாலயங்களுக்கு உட்பட்ட இ.தொ.காவின் மாவட்டத் தலைவர், தலைவி மற்றும் தோட்டக்கமிட்டி தலைவர், தலைவிமார்களுடனான ஜீவன் தலைமையில் நேற்று (24) இடம்பெற்றது.
நடந்து முடிந்த 2024 பாராளுமன்ற பொதுத் தேர்தலில் இ.தொ.கா விற்கு வாக்களித்த அனைத்து ஆதரவாளர்களுக்கும் கட்சியின் பொதுச் செயலாளர் என்ற வகையில் நான் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
அதேபோல், எதிர்வரும் காலங்களில் இ.தொ.கா வின் வளர்சிக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து எவ்வாறு செயற்படுவது அதன் மூலமாக எவ்வாறான வெற்றியினை பெற்றுக்கொள்வது என்று விரிவாக கலந்துரையாடப்பட்டது. R
21 minute ago
31 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
31 minute ago
46 minute ago