R.Maheshwary / 2022 செப்டெம்பர் 19 , மு.ப. 09:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஷேன் செனவிரத்ன
பேராதனை பல்கலைக்கழகத்தின் நான்காம் ஆண்டில் கல்வி கற்கும், மாணவன் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த மாணவன் கடந்த 16ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக மாணவனின் பெற்றோர் பேராதனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
யக்கல பிரதேசத்தைச் சேர்ந்த மாணவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
மாணவனின் கையடக்கத் தொலைபேசிக்கு அவரது நண்பர்கள் அழைப்பை ஏற்படுத்திய போது பதில் கிடைக்காததால், விடுதி உரிமையாளரிடம் விசாரித்துள்ள நிலையில், இதன்போது மாணவனின் அறை மூடியிருப்பதாகவே விடுதி உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
பின்னர் நேற்று (18) மாலை மாணவன் தங்கியிருந்த அறையை சோதனையிட்ட போது, மாணவனால் எழுதப்பட்ட கடிதம் பொலிஸாரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அக் கடிதத்தில் தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக எழுதியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

3 hours ago
4 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago
7 hours ago