2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

பவுசர் மூலமாவது குடிநீரை தருமாறு குருந்துவத்த, பெரிஹில்வத்த மக்கள் கோரிக்கை

Kogilavani   / 2016 மார்ச் 24 , மு.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கண்டி, ஹாரிஸ்பத்துவ பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட குருந்துவத்த, பெரிஹில்வத்த ஆகிய பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ள சுமார் 150 குடும்பங்களும்,   தண்ணீர் பவுசர் மூலமாவது குடிநீரை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

இப்பகுதியில் கண்டி நீர் விநியோகத் திட்டம் இருந்த போதிலும் தமக்கு நீர் கிடைப்;பதில்லை என அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

இங்கு காணப்படும் குடிநீரானது, குருனாகலை-புத்தளம் போன்ற பகுதிகளுக்கு கொண்டுச் செல்லப்படுவதாகவும் தாம் குடிநீரை பெற்றுக்கொள்வதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மலையகத்தில் வரட்சி நிலவுகின்ற இக்காலத்தில்  கிணறுகள் அனைத்தும் நீர் வற்றிய நிலையில் காணப்படுவதால் வெளி பிரதேசங்களுக்குச் சென்றாலும் நீரைப் பெற்றுக்கொள்ள  முடியாதுள்ளதாக அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, தற்காலிகமாக பவுசர் மூலமாவது நீரை பெற்றுத் தருமாறு அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதுதொடர்பில் மத்திய மாகாண வீதி அபிவிருத்தித்துறை அமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பிரதேச அமைப்பாளருமான எதிரிவீர வீரவர்தனவிடம் வினவியப்போது, 'இப்பகுதிகளுக்கு நீரை பெற்றுக்கொடுப்பதற்கான நீர் விநியோகத் திட்டமொன்று அமுல்படுத்தப்படவுள்ளது.  அதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.   அத்திட்டம் அமுல்படுத்தப்பட்டவுடன் இம்மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .