2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

பாடசாலைக்கு அருகில் கஞ்சா விற்பனை

R.Maheshwary   / 2022 ஏப்ரல் 20 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமு தனராஜா

கஞ்சா விற்பனை செய்யப்படும் நபர் ஒருவருக்கு எதிராக, இளைஞர்களால் பசறை பொலிஸ் நிலையத்தில் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டதோடு முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பசறை தமிழ் தேசிய பாடசாலைக்கு அருகாமையில் மிக நீண்ட காலமாக நபர் ஒருவர் கஞ்சா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும் இதனால் இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களும் கஞ்சா பாவனைக்கு அடிமையாவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 பலமுறை குறித்த நபருக்கு விற்பனை செய்ய வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதுடன்,  பொலிஸாரால் பலமுறை சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போதிலும் அவர் கஞ்சா விற்பனையை கைவிடவில்லை என்றும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

 இதனால் பிரதேசவாசிகள் இணைந்து ,சந்தேகநபருக்கு எதிராக  மகஜர் ஒன்றில் கையொப்பம் இட்டு  பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் கையளித்துள்ளதுடன்,  முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X