Janu / 2025 பெப்ரவரி 05 , பி.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுளை கன்னலவத்தை பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக குறித்த மாணவியின் பாட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
பதுளை தமிழ் பாடசாலையொன்றில் கல்வி கற்கும் குறித்த மாணவி கடந்த 03 ஆம் திகதி பாடசாலைக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து வெளியேரியுள்ளதுடன், பாட்டி தனது தொலைபேசியை சார்ஜ் போடுவதற்காக மாணவியின் அறைக்கு சென்று பார்த்தபோது அவரது ஆடைகள் இருக்கவில்லை எனவும் அடுத்த நாள் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு தனது காதலனுடன் வந்து விட்டதாக கூறியதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
குறித்த மாணவியின் தாய் வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்று சென்றுள்ள நிலையில் தந்தை கொழும்பில் பணிப்புரிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கஹட்டருப்ப பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago