மொஹொமட் ஆஸிக் / 2020 மே 26 , பி.ப. 08:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாத்ததும்பறை பிரதேசசபை பிரிவுக்குட்பட்ட உடதலவின்ன – கலதெனிய பாதையை அபிவிருத்தி செய்து தரும்படி பாத்ததும்பறை பிரதேச சபை உறுப்பினர் ஜே.எம்.நவுபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாத்ததும்பறை பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டம், வத்தேகம பிட்டியே கெதரையில் அமைந்துள்ள பாத்ததும்பறை பிரதேச சபை கேட்போர் கூடத்தில், அதன் தலைவர் கீர்த்தி பண்டார தலைமையில் இன்று (26) நடைபெற்றது.
இதன்போது, பிரதேச சபைக்குறிய மேற்படி பாதை நீண்டகாலம் திருத்தப்படாமல் இருந்த காரணத்தால், தற்போது அதில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அதை அபிவிருத்தி செய்ய உடன் நடவடிக்கை எடுக்கும் படியும் கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் அதிகாரிகளை அனுப்பி இது தொடர்பான தகவல்களைத் திரட்ட நடவடிக்கை எடுப்பதாக, சபைத் தவிசாளர் உறுதியளித்தார்.
15 Apr 2026
15 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Apr 2026
15 Apr 2026