Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
R.Maheshwary / 2022 செப்டெம்பர் 05 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
துவாரக்ஷான்
பொகவந்தலாவை - தென்மதுரை தோட்டத்தில் 200 குடும்பங்கள் பயன்படுத்தும் பாலமானது, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், இம்மக்கள் தமது அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் பெரும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த பாலம் 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
அடிக்கடி மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, இந்த ஆற்றில் அதிக நீர் பெருக்கெடுப்பதால் இங்கு வாழும் மக்கள் பல துயரங்களை சந்திக்கின்றனர்.
பாடசாலை மாணவர்கள், கர்ப்பிணிகள், நோயாளர்கள், தொழிலுக்கு செல்பவர்கள் வெளியிடங்களுக்கு செல்பவர்கள் என பலரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சிலர் தவறியும் விழுந்துள்ளனர். பாலத்தை புனரமைத்து தருமாறு அரசியல்வாதிகளிடம் பலமுறை கோரிக்கைகள் விடுத்த போதிலும் இதுவரை பாலத்தை புனரமைத்து தருவதற்கு எவரும் முன்வரவில்லை என இத்தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
மக்கள் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக, இவர்களின் முயற்சியால் பலகைகளைக் கொண்டு தற்காலிக பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள்> சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பாலத்தினை புனரமைப்பு செய்து தருமாறு கோரிக்கை விடுக்கின்றனர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
18 May 2025