Editorial / 2020 ஜூன் 10 , பி.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.சந்ரு
நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியின் நானு-ஓயா முதல் ரதல்ல சந்தி வரையான வீதி, பாவனைக்குதவாத நிலையில் இருப்பதாக, பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்த வீதியை, தினமும் 20 தோட்டங்களைச் சேர்ந்த 30,000 பேர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தப் பாதையின் புனரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த போது, மண் மேடு வெட்டப்பட்டு வீதியில் போடப்பட்ட நிலையில் இருப்பதாகவும் மண்குவியல், இதுவரை காலமும் அப்புறப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால், அனைத்து பஸ்களும், நானு-ஓயா குறுக்குப் பாதையையே பயன்படுத்தி வருகின்றனர் என்றும் இதனால், டெஸ்போட், கிரிமெட்டிய பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு, நகரத்துக்குச் செல்வதற்கு பஸ்கள் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, இது தொடர்பில் அரசியல் பிரமுகர்களும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago