Editorial / 2018 பெப்ரவரி 13 , பி.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.சங்கீதன், ஆ.ரமேஷ், எஸ்.சதீஸ்
நுவரெலியா, மாகாஸ் தோட்டத்தில் அமைந்துள்ள பிள்ளைப் பராமரிப்பு நிலையமொன்றும் அதற்கு அருகிலுள்ள களஞ்சியசாலையொன்றும், இன்று (13) அதிகாலை 3.30 மணியளவில், தீக்கிரையாகியது.
தோட்டப் பொதுமக்களும் நுவரெலியா பொலிஸாரும், நுவரெலியா மாநகரசபை தீயணைப்புப் படையினரும் இணைந்து, தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த போதிலும், சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் இருந்த அனைத்து உபகரணங்களும் எரிந்து சாம்பராகியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், அந்நிலையத்துக்கு அருகிலிருந்த தும்பு சேகரிப்பு நிலையம் மற்றும் அதில் காணப்பட்ட இயந்திரங்களும், தீக்கிரையாகி அழிந்துள்ளனவென்றுத் தெரிவித்த பொலிஸார், இந்தத் தீ விபத்து, தானாக ஏற்பட்டதா அல்லது எவரேனும் தீயிட்டனரா என்று கண்டறிவதற்காக, இரசாயனப் பரிசோதகர்கள் வரழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
4 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
18 Apr 2026