2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

புகையிரதத்துடன் மோதிய கார் - ஒருவர் பலி

Freelancer   / 2022 ஏப்ரல் 16 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். யோகா

கண்டி - கெலிஒயா பிரதேசத்தில் உள்ள புகையிரத கடவையில் நேற்று  இரவு கார் ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.

கட்டுகஸ்தோட்ட பகுதியில் இருந்து கெலிஒயா நகரில் இருக்கும் உறவினர் வீடுகளுக்கு தாய், தந்தை, மகன் மூவர் காரில் வந்துள்ளனர் ,

உறவினர் வீட்டுக்கு செல்லும் வழியில் வைத்து இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.

கண்டியில் இருந்து நாவலப்பிட்டி நோக்கி சென்ற புகையிரதத்தில் மோதி இந்த விபத்து ஏற்பட்டது.

மூவரும் பலத்த காயங்களுக்குள்ளாகி பேராதெனிய வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின் தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை பேராதெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X