Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 செப்டெம்பர் 09 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
விவசாயத்துறையில் புதிய கண்டுபிடிப்புகளை, விவசாயிகள் மத்தியில் கொண்டுச் செல்வதற்கு, நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என, விவசாயத் துறை அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.
விவசாயத் தினைக்களத்தின் 19ஆவது தேசிய விவசாய கருத்தரங்கு, கண்டி, கன்னோருவையில் அமைந்துள்ள விவசாயத் திணைக்களத்திழல் இடம்பெற்றது. இதன்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“இன்று விவசாயிகள் பல சிக்கல்களை முன்னோக்குகின்றனர். கடந்த மூன்று போகங்களில் கடும் வரட்சி, கடும் மழை, வௌ்ளம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான நிலையில், விவசாயத் துறையில் புதிதாக நடத்தப்படும் ஆராய்ச்சிகள் மற்றும் புதிய கண்டு பிடிப்புகள் விவசாயிகள் மத்தியில் சென்றடைய வேண்டும். அவ்வாரு புதிய கண்டு பிடிப்புகள், விவசாயிகள் மத்தியில் சென்றடைந்தால் மாட்டும்தான், இந்தப் பூமியல் அதனை யதார்த்தமாக்கலாம்.
“இது காலம் வரை, விவசாயிகள் தொடர்பான எவ்வித நிலையான விவரங்களும் இருக்கவில்லை. எனவே, நாங்கள் தற்போது விவசாயிகளது அனைத்து விவரங்களையும் கணனி மயப்படுத்தத் தீர்மானித்துள்ளோம். எதிர்வரும சில மாதங்களில், அது பூர்த்தி செய்யப்படும். அவ்வாரு கணினி மையப்படுத்தப்பட்ட பின்னர், எந்த அளவு நிலத்தில் விவசாயம் மேற்கொள்ளப்படுகின்றதோ, எந்த அளவுக்கு அறுவடை பெற்றுக்கொள்ள முடியும் என்பதைப் பெற்றுக்கொள்ள முடியும்” என்று அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago