Freelancer / 2022 மார்ச் 25 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
தலவாக்கலை - லிந்துலை நகர சபையின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர் சந்தன பிரதீப் குணதிலக்க நேற்று (24) மாலை தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
மத்திய மாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளர் மேனகா ஹேரத் தலைமையில் நேற்று முன் தினம் (23) நடைபெற்ற நகர பிதாவுக்கான தேர்தலில், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர் சந்தன பிரதீப் குணதிலக்க பெயரை அதே கட்சியைச் சேர்ந்த பிரசன்ன விதானகே முன்மொழிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினரும் முன்னாள் நகர சபையின் பதில் தலைவருமான லெட்சுமன் பாரதிதாசன் வழிமொழிந்தார்.
அதனால் அதனைத் தொடர்ந்து வாக்கெடுப்பு இடம்பெறாத நிலையில் 6 பேரின் ஆதரவுடன் புதிய தலைவர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார் .
ஏனெனில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கூட்டணியின் 6 பேரும் எதிர்தரப்பில் 4 பேரும் மாத்திரமே சபையில் இருந்தனர்.
புதிய தலைவருக்கு 6 பேரின் ஆதரவு கிடைத்ததன் காரணமாக வாக்கெடுப்பு இடம்பெறவில்லை .
கடந்த சில மாதங்களாக தலவாக்கலை லிந்துலை நகர சபையின் தலைவர் பதவி வெற்றிடமாக இருந்தது. அதன் பதில் தலைவராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர் லெட்சுமன் பாரதிதாசன் பதவி வகித்தார்.
இதனையடுத்து 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது இரண்டு தடவைகள் வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று முன் தினம் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடத்தப்பட்டது.
இதன்போது தலவாக்கலை லிந்துலை நகர சபையின் புதிய தலைவராக சந்தன பிரதீப் பிரதீப் குணதிலக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நேற்று முன் தினம் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட சந்தன பிரதீப் குணதிலக்க பதவியேற்கும் நிகழ்வில் தலவாக்கலை லிந்துலை நகர சபையின் செயலாளர் டி. வி. பி. பண்டார மற்றும் ஆளுங்கட்சி நகர சபை உறுப்பினர்கள் பலரும் கலந்துக்கொண்டனர். (R)
1 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
18 Jan 2026