2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

புதையல் தோண்ட முயற்சி; அறுவர் கைது

Editorial   / 2017 டிசெம்பர் 29 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச  

கிராதுருகோட்ட, தெமடன்எல்ல கல்பொருயாய பிரதேசத்தில், புதையல் தோண்ட முயற்சித்ததாகக் கூறப்படும் அறுவரை, கிராந்துருகோட்டை பொலிஸார், புதன்கிழமை இரவு கைதுசெய்துள்ளனர்.   

இதன்போது, புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்திய பொருட்களையும் பொலிஸார் அவர்களிடமிருந்து மீட்டுள்ளனர்.   

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில், பனாகொடை இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் மூவர் உள்ளடங்குகின்றனறென்றும் பொலிஸார் தெரிவித்தனர்.   

சந்தேக நபர்கள், தெல்தெனிய, செவனகல, கேன்கல்ல, மொனராகலை, லுணுகல மற்றும் கிராந்துருகோட்டை ஆகியப் பகுதிகளைச் சேர்ந்தவர்களென்று, ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.   

மேற்படி அறுவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .