2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

பெண்ணிடம் சேஷ்டை; ஆணுக்கு விளக்கமறியலில்

Kogilavani   / 2017 ஜூன் 02 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்   

தன்னை காதலிக்குமாறு கூறி, 25 வயது பெண்ணை நச்சரித்து வந்த இளைஞனை, எதிர்வரும் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, நுவரெலியா மாவட்ட நீதவான் பிரதீப் ருவான் த.டி.சில்வா, நேற்று, உத்தரவிட்டார்.  

ஸ்டேசன் வட்டகொடையைச் சேர்ந்த 30 வயதான இளைஞனே, இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,  

வட்டகொடை, மிடில் டிவிசனைச் சேர்ந்த பெண்ணொருவர்,  வாடகைக்கு அமர்த்தப்பட்ட முச்சக்கர வண்டியில், புதன்கிழமை தலவாக்கலைக்கு செல்ல முற்பட்டுள்ளார். வட்டகொடை நகரில் வைத்து, முச்சக்கர வண்டியை வழிமறித்த குறித்த இளைஞன், தானும் தலவாக்கலை செல்வதாகக் கூறி முச்சக்கர வண்டியில் ஏறியுள்ளார்.  

அதன்பின்னர், பெண்ணிடம் கதைகொடுத்த இளைஞன், சிறிது தூரம் சென்றதன் பின்னர், தன்னை காதலிக்குமாறு கோரி அப் பெண்ணை நச்சரித்துள்ளார்.   

தலவாக்கலையில் இறங்கிய அப்பெண், அவ் இளைஞன் குறித்து,  தலவாக்கலை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.  முறைப்பாட்டையடுத்து பொலிஸார் இளைஞனை தலவாக்கலை நகரில் வைத்து கைதுசெய்ததுடன், நேற்று நீதிமன்றில் அஜர்படுத்தியபோதே, நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .