2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பெண்ணின் சடலம் மீட்பு

பாலித ஆரியவன்ச   / 2017 செப்டெம்பர் 24 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச

பசறை, கனவருல்லவிலுள்ள பாழடைந்த மலசலகூடத்திலிருந்து, அதே பிரதேசத்தைச் சேர்ந்த வனசிங்க முதியன்சலாகே தயாவதி (வயது 56) என்ற பெண்ணின் சடலத்தை, பொலிஸார் சனிக்கிழமை மீட்டுள்ளனர்.

மனநலம் பாதிக்கப்பட்ட மேற்படி பெண், கடந்த சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்தாரென்றும், இது தொடர்பில் அவரது புகைப்படத்துடன் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்திருந்ததாகவும் அப்பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையிலேயே, மேற்படி பெண்ணின் சடலத்தை பொலிஸார், சனிக்கிழமை மீட்டுள்ளனர்.

பிரதேச பரிசோதனைக்காக பசறை வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .