2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

பெண்ணின் சடலம் மீட்பு

Editorial   / 2020 ஜூன் 09 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

மஹாவலி கங்கையில் நீராடச் சென்று நீரில் மூழ்கி உயிரிழந்த பெண்ணின் சடலத்தை, இன்று (9) காலை மீட்டுள்ளதாக, நாவலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

நாவலப்பிட்டி ஜயசுந்தரஒவிட பிரதேசத்தைச் சேர்ந்த சஹிரு நிஷா (வயது 44) என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

மேற்படி பெண், நேற்று (8) முன்தினம் காலை, நீராடுவதற்கு சென்றுவருவதாக கணவரிடம் கூறிவிட்டு மஹவலி கங்கைக்குச் சென்றுள்ளார் என்றும் மாலை ஆகியும் வீடு திரும்பாத நிலையில், அவரை தேடிச் சென்றபோது அவர் சடலமாகக் கிடப்பதை உறவினர்கள் கண்டறிந்துள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார் மேற்படி இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டுள்ளனர்.

பிரேதப் பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்படடுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .