Janu / 2025 செப்டெம்பர் 15 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊவா, குடா ஓயா பொலிஸ் பிரிவுக்கு சொந்தமான இராணுவ முகாம் வீதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிக் கொண்டிருந்த இருவரை சோதனையிட்ட ஞாயிற்றுக்கிழமை (14) அன்று சோதனையிட்ட போது அவர்களிடமிருந்து 35 இலட்சம் ரூபாய் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் இரண்டு சந்தேகத்திற்கிடமான நபர்கள் இருப்பதாக ஊவா குடா ஓயா இராணுவ முகாம் அதிகாரிகளால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய பொலிஸாரால் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி அவர்களின் பையில் இருந்து 35 இலட்சம் ரூபாய் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த இருவரும் ஹம்பாந்தோட்டை, திஸ்ஸமஹாராம வீதியைச் சேர்ந்த 44 மற்றும் 22 வயதுடைய தந்தை ,மகன் என தெரியவந்துள்ளது.
மனைவி அவர்களைக் கொல்ல திட்டமிட்டு இருந்ததாகவும், அதனால் குறித்த இருவரும் இவ்வாறு தப்பிச் சென்று மனைவியின் தங்க நகைகளை வங்கியில் அடகு வைத்ததாகவும் சந்தேக நபரான தந்தை தெரிவித்துள்ளார்.
15 ஆம் திகதி காலை, சந்தேக நபரின் மனைவியை பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணைகளை மேற்கொண்ட தனது கணவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், இதற்கு முன்னர் ஒரு துஷ்பிரயோகம் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்ததாகவும் கூறியுள்ளார்.
22 வயதுடைய மகன் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி இருந்தார்.
குறித்த தந்தையும் மகனும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குடா ஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்.
சுமனசிறி குணதிலக
28 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
51 minute ago
1 hours ago