Gavitha / 2021 மார்ச் 02 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா
மலையகத்தின் பெருந்தோட்டப் பகுதிகளில் மின்சார இணைப்புக்கள் அனைத்தையும் கொங்கீரீட்டாலான கம்பங்கள் ஊடாக ஏற்படுத்துவதற்கான தேசிய வேலைத்திட்டமொன்று மேற்கொள்ளவுள்ளதாக, மின்சாரதுறை அமைச்சர் டலஸ் அலகப்பெரும, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமாரிடம் உறுதியளித்துள்ளார்.
மலையகப் பெருந்தோட்டப்பகுதிகளில், கடந்த 40 வருடங்களாகவே மரக்கம்பங்களை நாட்டி, அதன் மூலமாகவே பெருந்தோட்டக் குடியிருப்புக்கள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட அமைப்பு பணியகங்களுக்கும் மின்சார இணைப்புக்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
நாட்டப்பட்டிருக்கும் இந்த மின்சாரக் கம்பங்கள், மரக்கம்பங்களாக இருப்பதால், அக்கம்பங்கள் பழுதாகியுமுள்ளன. இது குறித்து, மின்சார சபையினருடன் தொடர்புகொண்டு வினவியபோது, கொங்கிரீட்டிலானந மின்சாரக் கம்பங்களை, பெருந்தோட்டப்பகுதிகளுக்கு கொண்டு செல்வது சிரமமாகவுள்ளதாக என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனவே, தாங்கள் இது விடயத்தில் கூடிய கவனம் செழுத்தி, மரக்கம்பங்களை அகற்றி, கொங்கிரீட்டிலான கம்பங்களை நாட்டி, மின்சார இணைப்புக்களை ஏற்படுத்தும் தேசிய வேலைத்திட்டமொன்றை மேற்கொள்ளும்படி, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார், மின்சாரதுறை அமைச்சர் டலஸ் அழகப்பெருமவிடம், நேரடியாக கோரிக்கையொன்றை விடுத்திருந்தார்.
இந்நிலையிலேயே, கெங்கிரீட்டிலான கம்பங்களை நாட்டுவதற்கான தேசிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025