R.Maheshwary / 2022 மார்ச் 29 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
uஹட்டன் சதொச கிளையில் அமைதியின்மையை ஏற்படுத்திய நுகர்வோர் ஒருவர், ஹட்டன் பொலிஸாரால் நேற்று (28) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் குறித்த கிளையின் முகாமையாளர் மற்றும் பணியாளர்களை தாக்க முயற்சித்துள்ளதுடன், சதொச வர்த்தக நிலையத்தின் கண்ணாடிகளையும் உடைக்க முயற்சித்த குற்றச்சாட்டிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சதொச முகாமையாளரின் ஆலோசனைக்கமைய, நுகர்வோரால் கொள்வனவு செய்யப்படும் பொருள்களை கொண்டு செல்வதற்கு உரிய பையை நுகர்வோரே வீடுகளிலிருந்து கொண்டு வருமாறு, நுகர்வோரை அறிவுறுத்தும் வகையிலான பதாகை கிளைக்கு முன்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், நுகர்வோருக்கு பைகளையும் வழங்குவதற்கு ஹட்டன் சதொச கிளையில் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்,நேற்று (28) இரவு 7 மணியளவில் மின் துண்டிப்பு முன்னெடுக்கப்பட்ட வேளை, சதொச நிலையத்துக்கு வருகைத் தந்த நபர் ஒருவர், பொருள்களை கொள்வனவு செய்து முடிந்து, கட்டணத்தை செலுத்தும் போது, பொருள்களை போடுவதற்கான பையை பணியாளர் ஒருவர் கேட்டுள்ளார்.
இதன்போது கடுமையாக நடந்துகொண்ட குறித்த நபர், முகாமையாளர் உள்ளிட்டவர்களை தாக்க முயற்சித்துள்ளதுடன், பொருள்களுக்கும் சேதம் ஏற்படுத்த முயற்சித்துள்ளார்.
இதனையடுத்து ஹட்டன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட நபர், ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
18 Jan 2026
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 Jan 2026
18 Jan 2026