Kogilavani / 2021 மே 05 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதிஸ், எம்.கிருஸ்ணா
பொகவந்தலாவை பொது சுகாதார வைத்தியர் அதிகாரி காரியாலயத்துக்கு உட்பட்ட
பகுதிகளில், மேலும் 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
பிலிங்கிபொனி பகுதியிலுள்ள தொழிற்சாலையொன்றில், கடந்த 29 ஆம் திகதி 180
பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் இரண்டாம் தொகுதி அறிக்கை, நேற்ற(4) மாலை கிடைக்கப்பெற்றதில், மேலும் 14 பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள இன்ஜஸ்ரி கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்தவர்களே தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
மேலும் பொகவந்தலாவை நகரிலுள்ள சிகையலங்கார நிலைய ஊழியர் ஒருவருக்கும் சாஞ்சிமலை மேல் பிரிவில் ஒருவருக்கும் நோர்வூட் சென்ஜோன் டிலரி சிறுவர் நிலைய சிறுவர் பராமரிப்பாளர்
ஒருவருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
2 hours ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
6 hours ago