Editorial / 2025 ஜனவரி 10 , பி.ப. 02:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்,பி.கேதீஸ்
அரிசித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அக்கரப்பத்தனை மன்றாசி நகரில் வர்த்தகர்கள் வெள்ளிக்கிழமை (10) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அக்கரப்பத்தனை, மன்றாசி நகர வர்த்தகர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். இதன்போது, நகர வர்த்தகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சுலோகங்களை ஏந்தியவாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டுள்ளதால் அதனை உரிய வகையில் நுகர்வோருக்கு விற்க முடியாத சூழ்நிலை ஏற்படுவதாகவும், இதனால் சிறு வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
மேலும் கருத்து தெரிவித்த போராட்டகாரர்கள்,
நாட்டில் தைப்பொங்கல் வருகிறது. இதற்கு பொங்கல் பொங்குவதற்கு சிவப்பு அரிசி உள்ளிட்ட அரிசி வகைகள் தேவைப்படுகிறது. எனினும், அரிசி தட்டுப்பாடு நிலவுகிறது.
கட்டுப்பாட்டு விலைக்கு தான் எங்களுக்கு அரிசி வழங்கப்படுகிறது. இவ்வாறு கட்டுப்பாட்டு விலையை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுகின்றனர்.
கொழும்பிலிருந்து இந்த பகுதிக்கு அரிசியை கொண்டு வருவதாக இருந்தால் போக்குவரத்து கட்டணம், சுமை கூலி என பல விடயங்கள் இருக்கின்றன.
எனவே, கட்டுப்பாட்டு விலைக்கு விற்க முடியாத சூழ்நிலை இருக்கிறது. ஆகவே, கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கும், அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.








24 minute ago
34 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
34 minute ago
49 minute ago