Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
R.Maheshwary / 2022 ஓகஸ்ட் 25 , பி.ப. 01:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
பொறியில் சிக்கி சிறுத்தைக் குட்டியொன்று உயிரிழந்த சம்பவம் நாவலப்பிட்டி பகுதியில் இன்று (25) பதிவாகியது என நுவரெலியா வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நாவலப்பிட்டி- வெஸ்டோல் தோட்டத்தின் நிடலன்டிஸ் பிரிவிலேயே குறித்த சிறுத்தைக் குட்டி உயிரிழந்தது.
தேயிலைத் தோட்டத்திற்கு வரும் விலங்குகளுக்காக வைக்கப்பட்டிருந்த பொறியில் சிக்கியே குறித்த 2 வயதான சிறுத்தை உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறுத்தை உயிரிழந்தமை தொடர்பில் நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, அதன் உடற் கூறுகள் பரிசோதனைக்காக ரந்தெனிகல மிருக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்படவுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
2 hours ago
18 May 2025