2025 ஜூன் 23, திங்கட்கிழமை

பொலிஸ் பரிசோதனை

Editorial   / 2018 மார்ச் 25 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதிஸ், எஸ்.கணேசன்

ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் அரையாண்டு பொலிஸ் பரிசோதனை, ஹட்டன் கோட்ட பொலிஸ் அதிகாரி அம்பேபிட்டியவின் தலைமையில்,  ஹட்டன் டன்பார் மைதானத்தில், இன்று (25)  காலை 7 மணிக்கு நடைபெற்றது.

இதில் பொலிஸ் உத்தியோகத்தர்களின்  அணிவகுப்பு மறியாதை இடம்பெற்றதுடன், பொலிஸ் உத்தியோகத்தர்களின் உத்தியோகபூர்வ பரிசோதனையும் வாகன பரிசோதனையும் இடம்பெற்றது.

இந்த அணிவகுப்பில், ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் உயரதிகாரிகள், மகளிர் பொலிஸ் பிரிவு,  மோப்ப நாய் பிரிவு உட்பட ஹட்டன் கோட்டத்துக்குட்பட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் பங்கேற்றனர்.

இவ்வணிவகுப்பு, ஹட்டன் நகரினூடாகச் சென்றதுடன் இதில் வாகன ஊர்வலமும் இடம்பெற்றன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .