Editorial / 2017 டிசெம்பர் 26 , பி.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ, பாலித ஆரியவன்ச
சிவனொளிபாத மலை மற்றும் பண்டாரவளை ஆகிய பகுதிகளில், பெண்ணொருவர் உட்பட நால்வரை கஞ்சா மற்றும் ஹெரோய்னுடன் கைதுசெய்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
மிஹிந்தலையிலிருந்த சிவனொளிபாத மலைக்கு யாத்திரைக்காக வந்த இளைஞர்கள் மூவரிடமிருந்து திங்கட்கிழமை மாலை ஹெரோய்னை நல்லதண்ணி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மிஹிந்தலை, அநுராதபுரத்தைச் சேர்ந்த 25-30 வயதுடைய இளைஞர்களே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய இளைஞர்களை, பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியபோதே, அவர்களிடம் ஹெரோய்ன் இருப்பது தெரியவந்துள்ளது. மேற்படி இளைஞர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை, வெலிமடை, நுங்கத்தலாவ பிரதேசத்தில் வைத்து, 35 வயது பெண்ணொருவரை, 1 கிராம் 36 மில்லிகிராம் கஞ்சாவுடன் பண்டாரவளை பொலிஸார், திங்கட்கிழமை மாலை கைதுசெய்துள்ளனர்.
தனமல்விலவிலிருந்து பண்டாரவளைக்கு பஸ்ஸில் பயணித்துள்ள மேற்படி பெண், பண்டாரவளை பஸ் நிலையத்தில் இறங்கி, மற்றுமொரு பஸ்ஸில் ஏற முயன்ற போதே, கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார். பெண்ணின் கைப்பையிலிருந்து கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
8 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
1 hours ago