2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

முச்சக்கரவண்டி பள்ளத்தில் பாய்ந்ததில் மூவருக்கு காயம்

Gavitha   / 2016 பெப்ரவரி 07 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

கொழும்பிலிருந்து பொகவந்தலாவயை நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்று, இன்று ஞாயிற்றுக்கிழமை (07)அதிகாலை 10 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில், 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த முச்சக்கரவண்டி, ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை பிரதேசத்தில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

முச்சக்கரவண்டியை, அதன் சாரதி வேகமாகச் செலுத்தி வந்ததனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார், இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .