George / 2016 ஜனவரி 16 , மு.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ
கோவிலுக்கு செல்லும் வழியில் முச்சக்கரவண்டி ஒன்றால் மோதுண்டு பலத்த காயங்களுக்குள்ளான 8 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஹட்டன் - போடைஸ் பிரதான வீதியின் டிக்கோயா பட்டல்கலை பகுதியில் இவ்விபத்து நேற்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை தைப்பொங்கல் தினத்தில் மாலை வேளையில் பட்டல்கலை தோட்ட பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு வழிபாட்டுக்கென சென்ற 8 வயது சிறுவனும் அவரின் சகோதரனும் பட்டல்கலை பகுதியின் பிரதான வீதியில் வேக கட்டுப்பாட்டை மீறி வந்த முச்சக்கரவண்டி, வீதியில் சென்ற இவர்களின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் படுங்காயமடைந்த சகோதரர்கள், அயலவர்களினால் டிக்கோயா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின் கண்டி வைத்தியசாலைக்கு உடனடியாக மாற்றப்பட்டனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி 8 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முச்சக்கரவண்டி சாரதியை பிடித்த பொதுமக்கள் அவரை ஹட்டன் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago