Kogilavani / 2016 ஜூலை 05 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இரமாச்சந்திரன்
ஹட்டன், காசல்ரீக்குட்பட்ட ஆரம்பப் பாடசாலையொன்றில் தரம் 04 இல் கல்வி பயின்றும் வரும் மாணவனொருவன் ஆசிரியையின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாடப் புத்தகங்களுக்கு அட்டைகள் போடவில்லை என கூறி மேற்படி ஆசிரியை, பிரம்பினால் மாணவனின் கைகளில் அடித்துள்ளதாக தெரியவருகிறது.
இச்சம்பவம் வெள்ளிக்கிழமை (01) இடம்பெற்றுள்ள போதிலும் மாணவனின் பெற்றோர் நேற்று செவ்வாய்க்கிழமையே ஹட்டன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இது தொடர்பில் குறித்த ஆசிரியையிடம் வினவியபோது, 'மாணவன் நீண்ட நாட்களாக தனது புத்தகங்களுக்கு அட்டை போடவில்லை. மாணவனின் பெற்றோருக்கு அழைப்பு விடுத்தப் போதிலும் அவர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை. மாணவனை சிறந்த மாணவனாக மாற்றும் நோக்கில் கைபிரம்பினால் அடித்தேன். மாணவன் மீது தனிப்பட்ட கோபங்கள் எதுவுமில்லை. வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் மாணவனை பார்வையிட்டு நலன் விசாரித்தேன்' என்றார்.
7 hours ago
7 hours ago
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
12 Apr 2026