2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மாணவனின் உடற் கூறுகளை இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்ப அனுமதி

Sudharshini   / 2015 டிசெம்பர் 01 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா                                                      

பதுளை பகுதியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த  மாணவனின் உடல் உறுப்புக்களின் முக்கிய பாகங்களை இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பி வைக்குமாறு பதுளை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஹேமிந்த தயாவன்ச, செவ்வாய்க்கிழமை (01) உத்தரவிட்டுள்ளார்.  

பதுளையிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் 7ஆம் தரத்தில் கல்வி கற்று வந்த 12 வயது நிரம்பிய சரித் டிலான் சேனாரட்ண என்ற மாணவனே கடந்த 29ஆம் திகதி திடீரென உயிரிழந்திருந்தான்.  

பதுளை வைத்தியசாலையின்  சட்ட வைத்திய அதிகாரி டபிள்யூ.சி.லக்மாலி, சடலத்தின் முக்கிய உறுப்புக்கள் சிலவற்றை இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பி, அறிக்கை பெற்றுக்கொள்ளவிருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இதற்கமையவே, சடலத்தின் முக்கிய உறுப்புக்கள் இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்துக்யுnஉhழசகு அனுப்;பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .