Kogilavani / 2017 ஏப்ரல் 03 , மு.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன், கு.புஸ்பராஜ், ஆ.ரமேஷ், எஸ்.சுஜிதா,மு.இராமச்சந்திரன்
வட்டகொடை, மெதகும்புர மத்திய பிரிவைச் சேர்ந்த வேலுசாமி விஜயராஜ் (வயது 41) என்பவர் மின்சார தாக்குதலுக்கு இலக்காகி, ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர், தனது சகோதரனின் முச்சக்கரவண்டிக்கு நிறப்பூச்சி பூசிக் கொண்டிருந்த வேளையில், மின்சார தாக்குதலுக்கு உள்ளானதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக, லிந்துலை பிரதேச வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
8 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
1 hours ago