Kogilavani / 2016 ஜூலை 01 , மு.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள், எஸ்.கணேசன்
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பல பகுதிகளில் நேற்று வியாழக்கிழமை (30) அதிகாலை முதல் கடுங்காற்றுடன்கூடிய கடும் மழை பெய்ததன் காரணமாக, 8 மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்பட்டது.
கடும் காற்றுக் காரணமாக மின்கம்பிகள் மீது மரக்கிளைகள் முறிந்து விழுந்தமையால் இந்த மின்தடை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடுங் காற்றையடுத்து, அதிசக்திவாய்ந்த மின்கம்பிகள் அறுந்து விழுவதனால் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரியுள்ளனர்.
குறிப்பாக தேயிலை மலைகளில் பணிப்புரியும் தொழிலாளர்கள், உயரமான மரம் மற்றும் மின்கம்பிகள் ஊடறுக்கின்ற இடங்களில் தொழில்புரியும்போது சற்று அவதானத்துடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.
9 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
11 Apr 2026
11 Apr 2026