2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

மாமா தாக்கியதில் மருமகன் பலி

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 07 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாமா, தன்னுடைய மருமகனின் தலையில் கத்தியால் வெட்டியமையால் மருமகன் பலியான சம்பவமொன்று பொல்பித்திகம, சியம்பலாவௌ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில், 35 வயதுடைய ஷமிந்த வர்ஷகோன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

நீண்ட காலமாக நிலவிய சொத்துப் பிரச்சினை முற்றிப்போய் இன்று வியாழக்கிழமை (07) காலை 6.30க்கு கைகலப்பாக மாறியுள்ளது. சம்பவத்தில் கடும் காயமடைந்தவர், குருநாகல் வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டபோது அங்கு மரணமடைந்துள்ளார். 

சந்தேகநபரைக் கைதுசெய்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .