Kogilavani / 2017 ஏப்ரல் 26 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், கு.புஸ்பராஜ், ஆ.ரமேஷ்
முச்சக்கர வண்டியின் சாரதி ஒருவரை தாக்கியக் குற்றச்சாட்டின் பேரில் மத்திய மாகாண சபை உறுப்பினரான ஏ.பி.சக்திவேலை, லிந்துலை பொலிஸார் இன்றுக் காலை கைதுசெய்துள்ளனர்.
லிந்துலை மெராயா நகரிலுள்ள மாகாண சபை உறுப்பினரின் வீட்டுக்கு முன்பாக வைத்திருந்த விளம்பர பலகையை, மேற்படி முச்சக்கர வண்டியின் சாரதி சேதப்படுத்தியதாகக் கூறி, அவரை மாகாண சபை உறுப்பினர் பொல்லால் தாக்கியுள்ளார்.
இச்சம்பவத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதி லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து மாகாண சபை உறுப்பினரை கைதுசெய்யுமாறு கோரி பிரதேச மக்கள், மேற்படி உறுப்பினரின் வீட்டுக்கு முன்பாக ஒன்றுகூடினார்.
இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஸ்தலத்துக்கு விரைந்த லிந்துலை பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக மாகாண சபை உறுப்பினரை லிந்துலை பொலிஸ் அழைத்துச் சென்றுள்ளதுடன் விசாரணையின் பின்னர் கைதுசெய்துள்ளனர்.
இந்நிலையில், மாகாண சபை உறுப்பினரின் வீடு மற்றும் மெரயா நகருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.








7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago