Princiya Dixci / 2015 ஒக்டோபர் 23 , மு.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
ஹல்துமுல்ல பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், கொஸ்லாந்தை மீரியபெத்தை மண்சரிவில் சிக்கி உயிழந்தவர்களுக்கான நினைவு தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி கொஸ்லாந்தை, மீரியபெத்தை ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 37 பேர் உயிரிழந்துள்ளதுடன், 300 பேர் நிர்க்கதிக்குள்ளாகினர். மேலும், பல வீடுகள், இந்து ஆலயம் என்பன மண்ணுக்குள் புதையுண்டன.
இதனை கருத்திற்கொண்டு இவ் அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கான நினைவுத்தினத்தை அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகளை ஹல்துமுல்லை பிரதேச சபை மேற்கொண்டுள்ளதாக பிரதேச செயலாளர் கே.எஸ்.ஜுவமாலா கூறியுள்ளார்.
இதேவேளை, நினைவு தினத்தை முன்னிட்டு மேற்படி பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை (23) புத்தர் சிலையொன்றும் வைக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.
.jpg)
2 hours ago
6 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
18 Apr 2026