Kogilavani / 2016 ஜனவரி 22 , மு.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.ஆ.கோகிலவாணி
பூணாகலை, மீரியபெத்த மண்சரிவினால் பாதிக்கப்பட்டு நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ள மக்களுக்கான வீடமைப்பு பணிகள் 99 சதவீதம் பூர்த்தியடைந்துள்ளதாகவும் இவ்வீடுகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதிக்குள் மக்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்தார்.
மீரியபெத்த வீடமைப்பு, தோட்ட தொழிலாளர்களுக்கான 2,500 ரூபாய் சம்பள அதிகரிப்பு தொடர்பில் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் இதனை கூறினார்.
மீரியபெத்த வீடமைப்புக்காக தெரிவுசெய்யப்பட்ட காணியை துப்புரவு செய்வதற்கு நீண்டகாலம் தேவைப்பட்டதாகவும் அதுவே வீடமைப்புக்கு தாமதமாகியதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, தோட்டத் தொழிலாளர்களுக்கு 2,500 ரூபாய் மாதாந்த வேதன அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படலாம் என்று தான் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago