2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

மக்கள் சந்திப்பு

Kogilavani   / 2016 ஜூலை 07 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான பழனி திகாம்பரத்தின் தலைமையில், விசேட மக்கள் சந்திப்பு ஹட்டன் நகரசபை மண்டபத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை (11) காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.

அமைச்சர் திகாம்பரத்துடனான மக்கள் சந்திப்பானது, ஒவ்வொரு புதன்கிழமையும் கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்திலே நடைபெற்றது.   இதனால், தூர பிரதேசங்களிலிருந்து வரும் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர்.

இதனை கருத்திற்கொண்ட அமைச்சர், தன்னை சந்திக்க வரும் மக்கள் எவ்வித சிரமங்களையும் எதிர்கொள்ளக்கூடாது எனவும் அதற்கான செயற்றிட்டங்களை முன்னெடுக்குமாறும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

இதற்கமைவாக, எதிர்வரும் நாட்களில் பிரதேச மற்றும் மாவட்டங்கள்; தோறும் இம்மக்கள் சந்திப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .