R.Maheshwary / 2022 ஓகஸ்ட் 28 , மு.ப. 09:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி- பேராதனை பாலத்திலிருந்து மஹாவலி ஆற்றில் பாய்ந்து இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
குறித்த இளைஞர் ஆற்றில் பாய்ந்த இடத்திலிருந்து பயணப் பை கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தேசிய அடையாள அட்டை, பல்கலைக்கழக அடையாள அட்டை, மடி கணினி, வங்கி அட்டைகள் இரண்டு, பரீட்சை வினாத்தாள்கள் என்பன காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கமைய குறித்த இளைஞன் பல்கலைக்கழக மாணவனாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகித்துள்ளனர்.
மேலும் ஆற்றில் பாய்ந்த இளைஞர், புளுகஹபிட்டிய- எஹலியகொட பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஆற்றில் பாய்ந்த இளைஞனைத் தேடும் பணிகள் கடற்படை, பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகளால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.
6 hours ago
6 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago
9 hours ago