Kogilavani / 2017 ஏப்ரல் 25 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த 17ஆம் திகதி முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்த மடூல்சீமை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் மடூல்சீமை, கல்லுள்ள தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், திங்கட்கிழமை இடம்பெற்ற பேச்சுவார்த்தையையடுத்து, நேற்று பணிக்கு திரும்பினர்.
மேற்படி தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வுக் காணும் முகமாக, பதுளை உதவி தொழில் ஆணையாளர் ஆர்.எம்.குமாரிஹாமி தலைமையில், பதுளை உதவி தொழில் ஆணையாளர் பணிமனையில் திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இப்பேச்சுவார்த்தையில், பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அகில இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம், இலங்கை தோட்ட சமூக சங்கம் ஆகிய தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இப்பேச்சுவார்த்தையின் போது, தொழிலாளர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டது. இதனையடுத்து தொழிலாளர்கள் அனைவரும் பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டுவிட்டு நேற்று பணிக்கு மீண்டும் திரும்பினர்.
2 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Apr 2026