Sudharshini / 2016 மே 30 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், எஸ்.சுஜிதா
லிந்துலை, சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயத்தின் கனிஷ்டப் பிரிவான ரோயல் கல்லூரியின் கட்டடம் அமைந்துள்ள பகுதியில் மண்சரிவு அபாயம் நிலவுவதால், அக்கட்டடத்தில் கல்வி பயின்றுவரும் மாணவர்கள், பாதுகாப்பான கட்டடமொன்றுக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.
இதேவேளை, பாடசாலையின் நிலைமை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்குமாறு பாடசாலையின் அதிபருக்கு பணிப்புரையும் விடுக்கப்பட்டுள்ளது.
பாடாசாலை வளாகத்தில் நிலவும் மண்சரிவு அபாயம் தொடர்பில், மத்திய மாகாண சபை உறுப்பினரும் மத்திய மாகாண கல்வியமைச்சின் கண்காணிப்பு உறுப்பினரான எஸ்.ஸ்ரீதரனின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவர் பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டார்.
அவர், பாடசாலையின் நிலமையை நேரடியாக அவதானித்ததுடன், அது தொடர்பில், மத்திய மாகாண முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றதோடு, இவ்விடயம் தொடர்பாக பாடசாலை அதிபரையும்; முதலமைச்சரோடு தொலைபேசியில் உரையாடவைத்தார்.
பின்னர், இது தொடர்பில் நுவரெலிய கல்விப் பணிப்பாளரின் கவனத்துக்கு கொண்டுவந்ததோடு, பாடசாலை நிலைமை தொடர்பில் அறிக்கை தயாரித்து நுவரெலிய கல்விப் பணிப்பாளருக்கு சமர்ப்பிக்குமாறு பாடசாலையின் அதிபரை கேட்டுக்கொண்டார்.


5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago