2025 மே 19, திங்கட்கிழமை

மண்மேடு சரிந்ததில் ஒருவர் பலி

R.Maheshwary   / 2022 செப்டெம்பர் 06 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷேஹ்ன் செனவிரத்ன

தவுலகல- யாலேகம பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 39 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தவுலகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


நேற்று (05) இரவு 8.00 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் துமிந்த பிரகாஷ் சஞ்சீவ என்ற நபர் உயிரிழந்துள்ளார்.


விபத்தின் போது வீட்டில் மேலும் ஒருவர் இருந்ததால் அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ள பொலிஸார், உயிரிழந்த நபர் வீட்டில் உள்ள மீன் தொட்டியில் உணவு வைக்க வந்த போதே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.


விபத்தில் சிக்கிய நபர் சிகிச்சைக்காக பேராதனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட  நிலையில் உயிரிழந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தவுலகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X