2025 மே 19, திங்கட்கிழமை

மண்மேட்டில் மோதிய பஸ்

R.Maheshwary   / 2022 செப்டெம்பர் 07 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதத் .எச்.எம்.ஹேவா

நீர்கொழும்பிலிருந்து ஹட்டன் வரை பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று, குயில்வத்தை பகுதியில் மண்மேடு ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்று (6) மாலை இந்த விபத்து இடம்பெற்றதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ் ஹட்டன் நோக்கி சென்றுக்கொண்டிருந்த போது, சாரதிக்கு அருகில் உள்ள கதவு திறந்துக்கொண்டதாகவும் இதன்போது சாரதி கதவை மூட முயன்ற போது, பஸ் மண்மேட்டில் மோதியுள்ளதாக பஸ்ஸின் சாரதி தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த விபத்தின் போது எந்தவொரு பயணிக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் சாரதி தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X