2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

மண்மேட்டை அகற்ற நடவடிக்கை எடுக்கவும்

R.Maheshwary   / 2022 செப்டெம்பர் 06 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷான்

கடந்த  ஆகஸ்ட் 3ஆம் திகதி பெய்த கடும் மழையால் மெராயா- கேம்ரி மேற்பிரிவு தோட்டத்தில்‌ உள்ள தனி குடியிருப்பின் பின்புறத்தில் பாரிய மண்மேடு சரிந்து  விழுந்ததால், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பாதிக்கப்பட்டனர்.

மண்மேடு சரிந்து விழுந்து,  ஒரு மாதம் கடந்த போதிலும் இதுவரை சரிந்து விழுந்த மண்ணினை அப்புறப்படுத்துவதற்கு எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சுமத்துகின்றனர்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நுவரெயா பிரதேச செயலகத்தில் கோரிக்கை மனு ஒன்றிணையும் கையளித்த போதிலும் எவரும் அது தொடர்பான நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதனால் தாம் தினமும் உயிர் அச்சத்துடன் இரவு பொழுதை கழிப்பதுடன், தமது கோழி வளர்ப்பு  சுயதொழிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X