2026 ஏப்ரல் 11, சனிக்கிழமை

மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சரானார் ரமேஸ்வரன்

Princiya Dixci   / 2017 மே 09 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன், எஸ்.கணேசன், ஆ.ரமேஸ்

மத்திய மாகாணத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக நிலவிவந்த தமிழ்க் கல்வி  வெற்றிடம் நிரப்பப்பட்டுள்ளது.

இந்த தமிழ்க் கல்வி வெற்றிடத்துக்கு மத்திய மாகாண விவசாயத்துறை மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சர் மருதபாண்டி ரமேஸ்வரன் நியமனம் பெற்றுள்ளார்.

இவரின் உத்தியோகபூர்வ பதவிப் பிரமாணம், கண்டியிலுள்ள மத்திய மாகாண ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்கவின் காரியாலயத்தில் நேற்று (08) நடைபெற்றது.

இதன்போது, ஆளுநர் முன்னிலையில், தனது தமிழ்க் கல்வியமைச்சு பதவி உயர்வுப் பத்திரத்தில் எம்.ரமேஸ்வரன், கையெழுத்திட்டு சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .