2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

மத்திய மாகாணத்தில் 218 பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய அடித்தளம்

Kogilavani   / 2016 செப்டெம்பர் 11 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

'அருகிலுள்ள பாடசாலை தரமான பாடசாலை' என்ற வேலைத்திட்டத்தின் கீழ், மத்திய மாகாணத்தில் 218 பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்தார்.

இதற்கமைவாக கண்டி மாவட்டத்தில்  75 பாடசாலைகளும் மாத்தளையில் 52 பாடசாலைகள், நுவரெலியாவில் 81 பாடசாலைகளும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

இப்பாடசாலைகளின் அபிவிருத்திக்காக 3,726 கோடி ரூபாய் நிதியை, கல்வியமைச்சு ஒதுக்கீடு செய்துள்ளதாகவும்  இதன்படி  கண்டி மாவட்டத்துக்கு 1209.30 மில்லியன் ரூபாயும் மாத்தளை மாவட்டத்துக்கு 835.40 மில்லியன் ரூபாயும் நுவரெலியாவுக்கு 1231.15 மில்லியன் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர்  கூறினார்.

பாடசாலைகளில் குறைபாடாகவுள்ள தொடர்மாடி கட்டடங்கள், ஆய்வுகூடங்கள், தனிக் கட்டடங்கள், சிற்றுண்டிச்சாலைகள், கைத்தொழில் கூடங்கள் மற்றும் அதிபர் இல்லங்கள் என்பன அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

மத்திய மாகாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட இப்பாடசாலைகளுக்கு, மாகாண கல்வி அமைச்சினால் விலைமனு கோரப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .