2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மதுபான போத்தல்களுடன் இருவர் கைது

Kogilavani   / 2017 செப்டெம்பர் 24 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச

அனுமதிப்பத்திரமின்றி சிறியரக லொறியொன்றில் கொண்டுச் செல்லப்பட்ட 744 மதுபான போத்தல்களுடன் இருவரை, எல்ல மற்றும் ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விசேட அதிரடிப்படை   அதிகாரிகள் சனிக்கிழமை கைதுசெய்துள்ளனர்.

பண்டாரவளையைச் சேர்ந்த இருவரே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கிடைக்கப்பெற்ற இரகிசயத் தகவலுக்கு அமைய, பண்டாரவளை-கிதல எல்ல வீதி வழியாக பயணித்த மேற்படி வாகனத்தை வழிமறித்து சோதனை செய்த அதிரடிப்படையினர், மேற்படி இருவரையும் கைதுசெய்துள்ளதுடன், மதுபான போத்தல்களையும் கைப்பற்றியுள்ளனர்.

சுமார் 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான மதுபானங்களே, இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன. மேற்படி இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .