2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

மத்திய மாகாணத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டம்

மொஹொமட் ஆஸிக்   / 2020 ஜூன் 16 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மாகாணத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்க, பலத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, மத்திய மாகாண கால்நடைகள், சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்தியர் குமுதுன ராஜநாயக்க தெரிவித்தார். 

இது தொடர்பாக இன்று (15) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர்,  

நாட்டின் மொத்தப் பால் உற்பத்தியில், அதிகூடிய உற்பத்தி, மத்திய மாகாணத்தின் மூலமே மேற்கொள்ளப்படுவதாகவும் இதை அதிகரிக்க, பலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.  

மத்திய மாகாணத்தின் கண்டி, மாத்தளை, நுவரெலியா மாவட்டங்களில் பால் உற்பத்திக்கான பல சாதகமான காரணிகள் உண்டு என்றும் பால்மாவை இறக்குமதி செய்வதற்கு, வருடமொன்றுக்கு 54 பில்லியன் ரூபாய் செலவிடப்படுவதாகவும் இந்நிலையில், உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம், நாட்டில் மிகப்பெரிய நிதியைச் சேமிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .