Editorial / 2024 ஏப்ரல் 08 , பி.ப. 02:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரொசேறியன் லெம்பட்
மன்னார் -தாழ்வுபாடு பிரதான வீதி ரெலிக்கொம் சந்திக்கு அருகாமையில் ஞாயிற்றுக்கிழமை (7) மாலை இடம்பெற்ற விபத்தில் மன்னாரில் உணவகத்தில் பணியாற்றிவந்த 22 வயதான இளைஞன் பரிதாபமாக மரணமடைந்துள்ளார்
உயிரிழந்தவர் ஹட்டன் பகுதியை சேர்ந்த (சந்துரு)சந்திரகுமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 6 வருடங்களுக்கு மேலாக மன்னார் மாவட்டத்தில் தொழில் நிமித்தம் உணவகங்களில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (7) மாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து இடம் பெற்று சிகிச்சைக்காக மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இளைஞன் பலியாகியுள்ளார்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
9 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
2 hours ago
3 hours ago