Editorial / 2017 ஒக்டோபர் 15 , பி.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கணேசன்
மஸ்கெலியா - சாமிமலை பெயார்லோன் தோட்டம் மயில்வத்தை பிரிவில், நேற்று (14) மாலை ஏற்பட்ட மினி சூறாவளியால் 5 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், சிறுவர்கள் உட்பட 16 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இச்சூறாவளியால், 5 வீடுகளில் உள்ள கூரைகள் அடித்துச் சென்றுள்ளதுடன், வீட்டில் இருந்த பொருட்களும் சேமாகியுள்ளன.
மேலும், மின்கம்பங்கள், பாரிய மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக இப்பிரதேசத்தில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட 5 குடும்பங்களைச் சேர்ந்த 16 பேருக்கு நிவாரணங்களை வழங்க தோட்ட நிர்வாகம், பிரதேசவாசிகள், கிராமசேவகர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மலையக பகுதிகளில் மழையுடன் கூடிய கடும் காற்று வீசுவதால் மக்களை அவதானமாக இருக்குமாறு, பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலநிலைக்கு மாறாக திடீரென கடும் காற்று தொடர்ந்து வீசி வருகின்றது.
இதனால் பாதுகாப்பற்ற, உயரமான மரங்களுக்கு கீழ் இருப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு, பொலிஸார் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதேவேளை, பாதுகாப்பற்ற முறையில் இருக்கும் மரங்களை வெட்டி அகற்றுமாறு கிராம உத்தியோகத்தர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
25 minute ago
1 hours ago
6 hours ago
17 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
1 hours ago
6 hours ago
17 Apr 2026