2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

மரை இறைச்சியுடன் மூவர் கைது: இருவர் தப்பியோட்டம்

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 15 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், காமினி பண்டார

சிவனொலிபாத மலை காட்டுப்பகுதியில் நடமாடித் திரிந்த மரையைக்; கொன்று, இறைச்சியக்கியக் குற்றச்சாட்டில் மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து 30 கிலோ கிராம் இறைச்சியையும் கைப்பற்றியுள்ளனர்.

மஸ்கெலியா, காட்மோர் தோட்டத்தைச் சேர்ந்த மூவரே, ஞாயிற்றுக்கிழமை (14) கைதுசெய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர்  தப்பியோடியுள்ளதாகவும் அவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறினார்.

இதேவேளை, கைப்பற்றப்பட்ட இறைச்சியை, கால்நடை சுகாதார பிரிவில் வைத்திய பரிசோதனைக்காக ஒப்படைக்கப்படவுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் மேலும் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .