Sudharshini / 2016 ஜூலை 04 , மு.ப. 11:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ, ஷெல்டன்
நுவரெலியா, மீபிலிமான கந்தியால காட்டுப்பகுதியில் மரையையொன்றை வேட்டையாடி கெப்ரக வண்டியில் கொண்டுச் சென்ற மூவரை அதிரடிப் படையினர் இன்று (04) கைது செய்துள்ளனர்.
மேற்படி, பகுதியில் துப்பாக்கி சத்தம் கேட்டதையடுத்து, அதிரடிப்படையினர் தேடுதலில் ஈடுபட்டனர். இதன்போதே , மரையை துப்பாக்கியால் சுட்டு, அதனை இரண்டு துண்டுகளாக வெட்டி, கெப் வண்டியில் ஏற்றிச் சென்ற வென்னப்புவ பிரதேசத்தைச் சேர்ந்த மூவரை, அதிரடிப்படையினர் கைதுசெய்து நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
மேற்படி மூவரையும் நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
2 hours ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
6 hours ago