2025 மே 19, திங்கட்கிழமை

மரக் குற்றிகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்துக்குள்ளானது

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 31 , பி.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

மரக் குற்றிகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று இன்று (31) விபத்துக்குள்ளாகியுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

டயகம- தலவாக்கலை பிரதான வீதியில் ஹோல்புரூக் பகுதியில் இன்று காலை 11 மணியளவில் டகயம பிரதேச தோட்டமொன்றில் இருந்து கொழும்பு நோக்கி யூகலிப்டஸ் மரங்களை ஏற்றிச் சென்ற லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவித்துள்ள பொலிஸார், விபத்து நடந்த போது, லொறியின் சாரதி பிரதேசவாசிகளால் காப்பாற்றப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X